Enable Javscript for better performance
மணல் திருட்டைத் தடுத்திட தமிழக முதல்வருக்கு கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மணல் திருட்டைத் தடுத்திட தமிழக முதல்வருக்கு கோரிக்கை

    By DIN  |   Published on : 24th June 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியில் மணல் திருட்டைத் தடுத்திட நடவடிக்கை எடுக்குமாறு வையகளத்தூர் கிராமப் பொதுமக்கள் சார்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    நீடாமங்கலம் வட்டம், வையகளத்தூர் கிராமப் பொதுமக்கள் சார்பில், பஞ்சாயத்து தலைவர் சி. ஆண்டியப்பன், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு (முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலம்) அண்மையில் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது :
    வையகளத்தூர் கிராமத்தில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே ஆற்றில் மணல் அள்ளி சேமித்து வைத்து, லாரிகள் மூலம் இரவு நேரங்களில் வெளியூருக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 17-ஆம் தேதி இரவு ஒரு லாரியும், டிராக்டரும் மணல் திருட்டில் ஈடுபட்டபோது, அதை கிராம மக்கள் தடுத்தனர்.
    அப்போது, அடியாள்கள் மூலம் பொதுமக்களை மிரட்டி லாரி, டிராக்டரை சம்பந்தப்பட்ட நபர்கள் எடுத்துச் சென்றனர்.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர், மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர், நீடாமங்கலம் காவல் ஆய்வாளர், வட்டாட்சியர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி, நீடாமங்கலம் பகுதியில் மணல் திருட்டைத் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai