Enable Javscript for better performance
முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அளவீடு பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு அளவீடு பணி தொடக்கம்

    By DIN  |   Published on : 24th June 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அளவீடும் பணியை வருவாய்த்துறையினர் வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
    முத்துப்பேட்டை பேரூராட்சியில் பல்வேறு பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக பரவலாக புகார் எழுந்தது. மேலும், ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், அதை அகற்ற வலியுறுத்தி, பாரதிய ஜனதா கட்சியினர் ஜூன் 20-ஆம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தனர்.
    இதற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம், மாவட்டத் தலைவர் பேட்டை சிவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    இந்நிலையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தை மிகவும் தீவிரமாக கருதிய மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி எல்லைப் பகுதியான ஆலங்காட்டில் இருந்து வட்டாட்சியர் கே. மகேஷ்குமார் மேற்பார்வையில், நில அளவையாளர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்த ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பாரபட்சமின்றி அகற்றி, போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai