சுடச்சுட

  

  விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு: இருவர் கைது

  By DIN  |   Published on : 24th June 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அருகே விளைநிலங்களில் குழாய் பதிக்கும் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட முயன்றவர்களை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
  திருவாரூர் அருகே கானூர் பகுதியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதித்து வந்தது.
  அப்போது, விவசாயிகளின் எதிர்ப்பால் இப்பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, அதே பகுதியில் மீண்டும் குழாய் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இப்பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு அடியக்கமங்கலம் செட்டித்தெரு கடைவீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி குழாய் பணிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த வந்த நிர்வாகிகள் நவாஸ், ராஜபாண்டி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து மாலை
  விடுவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai