Enable Javscript for better performance
வீட்டைத் திறந்து நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    நன்னிலம் அருகே வீட்டைத் திறந்து நகைகளை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றுள்ளனர்.
    திருவாரூர் அருகே நன்னிலம், வாழ்க்கைப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் மகன் அன்பழகன் (47). இவர் நன்னிலம் பணிமனையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி ஆசிரியை. இதனால், இருவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை வெளியில் இருக்கும் மின் இணைப்பு அளவெடுக்கும் பெட்டி மீது வைத்து விட்டுச் செல்வார்களாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது, பீரோவிலிருந்த 6 பவுன் நகைகள், வயல் பத்திரங்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரிய வந்தது. இதுகுறித்து அன்பழகன் அளித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai