சுடச்சுட

  

  அனுமதியற்ற மனைப்பிரிவுகளை நவ.3 வரை வரன்முறைப்படுத்தலாம்

  By DIN  |   Published on : 25th June 2018 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், கிராம ஊராட்சிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை நவ.3 வரை வரன்முறைப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.   
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
  நகர், ஊரமைப்புத் துறையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட  மனைப்பிரிவுகளை, விற்பனை  செய்ய  முடியாமலும்,  அந்த மனைகளில் வீடுகள் கட்ட அனுமதி பெற முடியாத நிலையும் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், தமிழக அரசு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் வெளியிடப்பட்ட அரசாணைப்படி,  அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தகுதியாக 20.10.2016-க்கு முன்னர் மனைப்பிரிவின் ஒரு மனையாவது பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  அதற்கு அணுகு சாலையாக கிராமப் பகுதிகளுக்கு 3.6 மீ. அகலம் அமைந்திருக்க வேண்டும். விற்பனை செய்யப்படாத மனைகளுக்கு மட்டும், 10 சதவீதம் பூங்கா ஒதுக்கப்பட வேண்டும். மனை ஒன்றுக்கு கூராய்வு கட்டணமாக ரூ.500-ம், வளர்ச்சிக் கட்டணமாக சதுர மீட்டருக்கு ரூ.25-ம் மற்றும் வரன்முறை கட்டணமாக சதுர மீட்டருக்கு ரூ.30-ம் செலுத்தப்பட வேண்டும்.
  அனுமதியற்ற மனைகளை வரன்முறைபடுத்த நவ.3 கடைசி நாளாகும். எனவே மனைப்பிரிவு உரிமையாளர்களும், மனை உரிமையாளர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வாய்ப்பைத் தவற விடுவோர், கட்டடம் கட்ட அனுமதியோ, குடிநீர் மற்றும் மின்சார வசதி பெறவோ இயலாது. மேலும் விவரங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தஞ்சாவூர் நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai