Enable Javscript for better performance
இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூரில் ஈஷா விவசாய இயக்கம் சார்பில் இயற்கை இடுபொருள்கள் தயாரிக்கும் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூரில் உள்ள ஈஷா நாற்றுப்பண்ணையில் "இயற்கை விவசாயத்தின் நுழைவாயில்' என்னும் தலைப்பில் இப்பயிற்சி நடைபெற்றது. இதுகுறித்து ஈஷா மையத் தன்னார்வலர் முத்துக்குமார் தெரிவித்தது: இயற்கை விவசாயத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்தில், ரசாயன உரங்களுக்கு மாற்றாக இயற்கை இடுபொருள்களை தயாரிக்கும் முறைகள், அவற்றை எவ்விதம் பயன்படுத்துவது, பயிர்களுக்கு அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போன்றவை விவசாயிகளுக்கு கற்றுத் தரப்பட்டன. பண்ணையில் கிடைக்கும் பொருள்களைக் பயன்படுத்தி விவசாயிகளே இந்த இடுபொருள்களைத் தயாரித்துக் கொள்ள முடியும். இதனால், உரச்செலவுகள் குறைவதால், விவசாயியின் நிகர வருமானம் அதிகரிக்கும்.
    அதிக உரச்செலவுகளால் ரசாயன விவசாயத்துக்கு மாற்று தேடும் முயற்சியில் இருக்கும் விவசாயிகளுக்கு இப்பயிற்சி பயனுள்ளதாக அமையும். இப்பயிற்சியை பெறும் விவசாயிகளின் பொருளாதார வளம் மேம்படும். 
    இயற்கை இடுபொருள்களை பயன்படுத்துவதால் மண்வளம் அதிகரிப்பதோடு நஞ்சில்லாத உணவுப் பொருள்களும் மக்களுக்கு கிடைக்கும். பயிற்சியில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், கன ஜீவாமிர்தம், பத்து இலை கஷாயம், அக்னி அஸ்திரம், நீம் அஸ்திரம், புளித்தமோர் கரைசல், மீன் அமிலம், வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சி விரட்டி, திராட்சை ரசம், தேமோர் கரைசல் உள்ளிட்ட 12 வகையான இடுபொருள்கள் செய்வதற்கு நேரடி செய்முறை பயிற்சியும் களப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 
    இந்த இடுபொருள்களில் அடியுரம், மேலுரம், வளர்ச்சியூக்கி, செயலூக்கி, பூச்சி விரட்டி போன்றவை அடங்கும். இப்பயிற்சியைத் தவிர பயிர்வாரியான பயிற்சிகளையும், பூச்சிகள், கால்நடைகள் குறித்த சிறப்புப் பயிற்சிகளையும் ஈஷா விவசாய இயக்கம் அளித்து வருகிறது என்றார் அவர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai