சுடச்சுட

    

    திருவாரூர் அருகே உள்ள தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு தாய்த்தமிழ் எழுத்துப் பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
    அடியக்கமங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் தமிழ்க்காவலன் பங்கேற்று 6, 7 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இப்பயிற்சியை அளித்தார். 
    இதில் தமிழ்மொழியின் சிறப்பு, கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டியதன் அவசியம், தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கு முன் அவற்றின் வடிவங்களை உற்றுநோக்குதல், எழுத்துக்களின் வடிவங்கள் சிதையாமல் எழுத வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து விளக்கப்பட்டன. அத்துடன், தமிழிலுள்ள 247 எழுத்துக்களையும் எவ்வாறு எழுதுவது என்பதை 5 கோடிட்ட எழுத்துப் பயிற்சி ஏட்டில் எழுதி விளக்கினார்.
    நிகழ்ச்சியில்  ஆசிரியர் மு. அன்பழகன் வரவேற்றார். ஆசிரியை ஜெ. லிட்டில் ஜெயா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai