சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    கோட்டூரை அடுத்த திருக்களர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் நமச்சிவாயம். இவருக்கு கோபு (40), பாபு (38) என 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக தகராறு இருந்து வந்ததாம்.
    இந்நிலையில், பாபு கோட்டூர் தாளாங்காட்டுத் தெருவில் சனிக்கிழமை நடந்து சென்றபோது, அங்கு வந்த கோபு பிரச்னை குறித்து அவரிடம் பேசினார். அப்போது, ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில், ஆத்திரமடைந்த கோபு அரிவாளால் வெட்டியதில் பாபு காயமடைந்தார். இதைத்தொடர்ந்து, அவர் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இது குறித்து கோட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து கோபுவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai