சுடச்சுட

    

    திருவாரூரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து திருவாரூரில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
    திருவாரூர்  துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, திருவாரூர்  துணை மின்நிலையம், கப்பல் நகர் துணை மின்நிலையம், அடியக்கமங்கலம்  துணை  மின்நிலையம் ஆகியவைகளிலிருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், இபி காலனி,  சிதம்பரநகர், பிலாவடி  மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுபத்தூர், நீலப்பாடி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai