சுடச்சுட

    

    தேசிய கராத்தே கருப்புப்பட்டை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு

    By DIN  |   Published on : 25th June 2018 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தேர்வில் வெற்றி பெற்ற முத்துப்பேட்டை மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை ஓஎம்ஏ பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவர் சைலேந்திரா, ஏழாம் வகுப்பு மாணவர் பிரதீப் ஆகியோர் அண்மையில் சென்னை எம்ஜிஆர் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே கருப்புப் பட்டை தேர்வில் பங்கேற்று, வெற்றி பெற்றனர். இவர்களுக்கு  கருப்புப் பட்டை மற்றும் சான்றிதழை அகில இந்திய இஷின்ரியூ கராத்தே கழக பிரதம பயிற்சியாளர் ஷிகான் உசேனி வழங்கினார். 
    பின்னர், முத்துப்பேட்டைக்கு திரும்பிய மாணவர்கள் இருவருக்கும் ஓஎம்ஏ பள்ளியில் அப்பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் சுவாமிநாதன் வரவேற்றுப் பேசினார். ஆசிரியைகள் தமிழ் இலக்கியா, சுபத்ரா, மாஜிதா, யோகா ஆசிரியை உஷா, உடற்கல்வி ஆசிரியை தேவி மற்றும் ஆசிரியர்கள்- ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சைலேந்திரா, பிரதீப் ஆகிய இருவருக்கும் பாராட்டுத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai