சுடச்சுட

    

    மன்னார்குடி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்த மாணவர், சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
     பருத்திக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சுந்தரேசன்(9). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். 
    மாணவர் சுந்தரேசன், வெள்ளிக்கிழமை மாலை பள்ளி வளாகத்தில் உள்ள மா மரத்தில் ஏறி மாங்காய் பறித்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை இரவு சுந்தரேசன் உயிரிழந்தார்.
     இதுகுறித்து, வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai