சுடச்சுட

  

  வடுவூர் ஏரி தூர்வாரும் பணி: அரசு நிகழ்ச்சியில் தனக்கு அழைப்பில்லை: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 25th June 2018 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட வடுவூர் ஏரியில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணி தொடக்க நிகழ்ச்சிக்கு தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என டி.ஆர்.பி. ராஜா குற்றம்சாட்டினார்.
  மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட வடுவூரில் வனத் துறைக்குச் சொந்தமான ஏரியை தூர்வாரும் பணி, தமிழக அரசு சார்பில், ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கப்பட்டது. தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்த இப்பணிக்கான தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மன்னார்குடி தொகுதி எம்எல்ஏடி.ஆர்.பி. ராஜாவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
  இந்நிலையில், அங்கு வந்த எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, தூர்வாரும் பணி குறித்து, அங்கிருந்த பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
   பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
  தமிழக அரசு சார்பில் தூர்வார விழா எடுத்திருக்கிறார்கள். இதற்கு, மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என்ற முறையில் எனக்கு தகவலும் அளிக்கவில்லை, அழைப்பும் விடுக்கவில்லை. இது எப்படி அரசு விழா என்று தெரியவில்லை. அரசு நிதி ஒதுக்கி, அதனால் மக்களுக்கு நன்மை நடக்கும் என்றால் இது அரசு விழாவாக எடுக்கலாம், ஆனால், இப்பணிக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை . இந்த ஏரியில் இருந்து தூர்வாரப்படும் பொருக்கு மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக தரவேண்டும் என்று தொடர்ந்து சட்டப் பேரவையில் குரல் கொடுத்து வருகிறேன். ஏரியை தூர்வார, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், தூர்வார அனுமதி மட்டும் அளித்துள்ளது. விவசாயிகள் தங்கள் சொந்த செலவில், விவசாயப் பயன்பாட்டிற்கு தேவையான மண்ணை எடுத்துக் கொள்ளலாம். இந்த ஏரியை தூர்வார வேண்டும் என கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசியதன் மூலம் இன்று அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பிரச்னைக்காக, திமுகவினருடன் இந்த பகுதி இளைஞர்கள் மற்றும் கூட்டமைப்பினர் இணைந்து போராடியதால் 
  தூர்வாரும் பணிக்கு அனுமதி பெற்று இருக்கிறோம் என்ற அடிப்படையில், கிராம மக்களுக்கும், இளைய சமுதாயத்தினருக்கும் மனமார்ந்தப் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
  இந்த பேட்டின் போது, திமுக ஒன்றியச் செயலாளர் வீ. மாயவநாதன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயகோபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai