சுடச்சுட

    

    மன்னர்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்தவரை, அவ்வழியே காரில் சென்ற அமைச்சர் ஆர். காமராஜ், இறங்கி வந்து  ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் அளித்து, உதவி செய்தார்.
    வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்தவர் கரிகாலன் (53). இவர், இருசக்கர வாகனத்தில் மன்னார்குடி- தஞ்சை பிரதானசாலையில் நெடுவாக்கோட்டை என்ற இடத்தருகே ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். 
    அப்போது, அவ்வழியே காரில் வந்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், காரிலிருந்து இறங்கி, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் அளித்தார். பின்னர், கரிகாலனை  ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார் . 
    அங்கு, கரிகாலனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். 
    இதுகுறித்து, மன்னார்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai