சுடச்சுட

  

  ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 26th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது. 
  முத்துப்பேட்டை அருகே எடையூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மன்றத்தின் முத்துப்பேட்டை ஒன்றிய மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும், முத்துப்பேட்டை, எடையூர், இடும்பாவனம் ஆகிய பகுதிகளில் இங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் காலியிடங்களை உடனடியாக நிரப்பி, அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வழங்காமல் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளிகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 7-ஆம் தேதி முத்துப்பேட்டை பகுதிகலல் இருசக்கர வாகன பிரசார பேரணி நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  பெருமன்றத்தின் ஒன்றியத் தலைவர் கே. சுடர்ரமேஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், ஒன்றியச் செயலர் சிவச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் துரை அருள்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சந்திரசேகரஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
  புதிய நிர்வாகிகள்: மாநாட்டில், தலைவராக பி. பரமசிவம், செயலராக சரவணக்குமார், பொருளாளராக ப. விஜய், துணைத் தலைவர்களாக ஜெ. காரல்மாக்ஸ், எஸ். மாரியப்பன், துணைச் செயலர்களாக வ. பவுன்தாஸ், கோகுல் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai