ஆலங்குடி குருபகவான் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published on : 26th June 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், நந்திகேசுவரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷ நாயகர் பிராகார உலாவும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல், நீடாமங்கலம் காசிவிசுவநாதர்கோயில், கோகமுகேசுவரர் கோயில், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.