சுடச்சுட

    

    காரில் டயர் வெடித்து விபத்து: ஓட்டுநர் சாவு, 5 பேர் காயம்

    By DIN  |   Published on : 26th June 2018 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்து, சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்தார். 5 பேர் படுகாயமடைந்தனர்.
    காரைக்கால் புதுவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பெரியார் மணி (36). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன், பிரகாஷ், மணிமாறன்,  பரமேஷ், ராம்குமார் ஆகிய ஆறு பேரும் ஒரு காரில் புதுக்கோட்டை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றனர்.
    பின்னர், அவர்கள் அங்கிருந்து முத்துப்பேட்டை வழியாக திருத்துறைப்பூண்டி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் வந்துகொண்டிருந்தனர். பெரியார் மணி காரை ஓட்டி வந்தார். இந்த கார் பின்னத்தூர் வளைவு அருகே வரும்போது, முன்பக்க டயர் வெடித்து, சாலையோரத் தடுப்பில் மோதி, பள்ளத்தில் கவிழ்ந்தது.
    இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேரையும் அப்பகுதியினர் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அங்கு, சிகிச்சைப் பலனின்றி பெரியார் மணி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    பொதுமக்கள் கோரிக்கை: பின்னத்தூர் வளைவுப் பகுதியில் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறையினர்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai