சுடச்சுட

  

  காலமுறை ஊதியம் கோரி கிராம உதவியாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம்

  By DIN  |   Published on : 26th June 2018 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காலமுறை ஊதியம் வழங்கக் கோரி, திருவாரூரில்  தமிழ்நாடு  வருவாய்த் துறை கிராம  உதவியாளர் சங்கத்தினர் தட்டு ஏந்தி பிச்சை  எடுக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். 
  அலுவலக உதவியாளருக்கு இணையான அடிப்படை ஊதியம் மற்றும் அரசு  ஊழியர்கள் பெறும் அனைத்து சலுகைகளும் கிராம உதவியாளர்களுக்கும் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெற்றியில் பட்டை நாமம் போட்டு, தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
  இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. மனோகரன் தலைமை வகித்தார்.  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜி. பைரவநாதன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai