சுடச்சுட

  

  திருவாரூரில் ஜூலை 11-இல் அதிமுக பொதுக்கூட்டம்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

  By DIN  |   Published on : 26th June 2018 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விழாவைக் கொண்டாடும் வகையில், அதிமுக சார்பில், வருகிற ஜூலை 11-ஆம் தேதி திருவாருரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.
  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், அதிமுக மாவட்டச் செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
  இதில், காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது, மாவட்ட அதிமுக சார்பில், காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாவைக் கொண்டாடும் வகையில், திருவாரூரில் வரும் ஜூலை 11-ஆம் தேதி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தை மிக சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இக்கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ பாப்பாசுப்ரமணியம், ஜெ. பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் மன்னார்குடி கா. தமிழ்ச்செல்வம், கோட்டூர் வீ. ஜீவானந்தம், நீடாமங்கலம் கோ. அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai