சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் 35, 982 பேர் ரூ.77. 89 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகள் பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நோய் நொடியின்றி மக்கள் வாழவும் வந்த நோயை போக்கவும் ஏழை,  எளிய நலிந்த மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சம் வரையிலும்,  சில குறிப்பிட்ட மருத்துவச் சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம்.  ஒரு குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அக்குடும்பத்தினர் வருமான வரம்பின்றி இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இத்திட்டம் தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  1.016 நோய்களுக்கு அறுவைச் சிகிச்சையும், 23 நோய்களுக்கு பரிசோதனையும், 113 நோய்களுக்கு தொடர் சிகிச்சையும் தர  தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. அனைவரும் மருத்துவ வசதிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் மக்களுக்கான ஒரு மகத்தான திட்டமாகும். திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு மருத்துவமனைகளும், 5 தனியார் மருத்துவமனைகளும் காப்பீடுத் திட்டத்தின்கீழ் மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்கி வருகின்றன. இதுவரை திருவாரூர் மாவட்டத்தில்  35,982 ஏழை,  எளிய மக்கள் ரூ.77. 89 கோடி செலவில் சிகிச்சைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai