சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு 950 டன் சன்னரக நெல் அரவைக்காக செவ்வாய்க்கிழமை சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், மன்னார்குடி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் சேமித்து வைக்கப்பட்ட நெல், என மொத்தம் 950 டன் எடை கொண்ட சன்னரக நெல் மூட்டைகள், 75 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன. நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள், சரக்கு ரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai