சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இக்கருத்தரங்குக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மு.ச. பாலு தலைமை வகித்தார். ஆலத்தம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் துணை மருத்துவர் சி. சங்கீதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:  
  சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை பள்ளியில் கடைப்பிடிக்கக் காரணம், இந்நிகழ்ச்சி மூலம் இச்செய்தி பெற்றோர் மற்றும் சுற்றத்தாரிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதால்தான். தனிமை, மனக்கவலை, தவறான நண்பர்களின் பழக்கம் போன்ற காரணங்களால் போதைப் பொருளுக்கு அடிமையாவது அதிகரித்து வருவகிறது. இவைகளை ஒருமுறை உபயோகித்துவிட்டால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் அடிமையாகும் நிலை ஏற்படும். இந்த தகவலை மாணவர்களிடம் கொண்டு சென்றால் மாணவர்களைச் சார்ந்த சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.  எந்த ஒரு போதைப் பொருளின் பழக்கமும் முடிவில் புற்று நோயில் தான் முடியும். எனவே, மாணவர்கள் இப்போதைப் பொருள்களை பயன்படுத்தாமல் தலை சிறந்த தலைமுறையாக உருவாக வேண்டும் என்றார்.
  நிகழ்ச்சியின் நிறைவில் சர்வதேச போதைப் பொருள்  ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. முதுகலை ஆசிரியர் செ. முகுந்தன் வரவேற்றார். ஓவிய ஆசிரியர் கு. நேரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் பா. ரகு நன்றி  கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai