சுடச்சுட

  

  மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை, மாவட்ட காவல் துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
  தேரடி காந்திசிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி டிஎஸ்பி வ. அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் பொ. குமார் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், காவல் துறையினர், ஊர்காவல் படையினர், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்கள், சமூக, தன்னார்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று, மேலராஜ வீதி, பெரியக் கடைத் தெரு, காந்திஜீ சாலை, மகாமரியம்மன் கோயில் தெரு, நடேசன் தெரு வழியாக ராஜகோபால சுவாமி கோயில் வரை விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு வழங்கியப்படி வந்தனர். நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளர் ஜெயந்தி, ஜேசிஐ மன்னை தலைவர் வி. அஞ்சறைப்பெட்டி ராஜேஷ், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் என். சாந்தகுமார், லயன்ஸ் சங்கச் செயலர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai