சுடச்சுட

  

  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி

  By DIN  |   Published on : 27th June 2018 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சார்பில், தீ தடுப்பு மற்றும் உயிர் மீட்பு சிகிச்சை குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
  பயிற்சியில் பல்வேறு விதமான தீ விபத்துகளில் உடனடியாக செய்ய வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் உடனடியாக தீ அணைக்கும் முறை குறித்தும் தீயணைப்பு அலுவலர் பஞ்சநாதம் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் செய்து காட்டினர். 
  மேலும், காயம் அடைந்தவர்களை ஒருவராகவும், இருவராகவும் தூக்கிச் செல்லும் முறை பற்றியும், ஆறு பேர் இணைந்து ஸ்ட்ரெச்சர்  போன்ற அமைப்பை ஏற்படுத்தி தூக்கிச் செல்வது பற்றியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றும் விதம் குறித்தும், வீட்டுக்குள் புகுந்த பாம்பை அகற்றும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
  பயிற்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா, நிலைய மருத்துவர் பொறுப்பு அப்துல் ஹமீது அன்சாரி, துணை நிலைய மருத்துவர் அருண்குமார், செவிலிய கண்காணிப்பாளர் பத்மா உள்ளிட்ட பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai