Enable Javscript for better performance
திருவாரூர் மைய நூலகத்தில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட மைய நூலகத்தில் வாசிப்பு இயக்கம்- 2022 எனும் அமைப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
    இந்த இயக்கத்தை மத்திய நிதி ஆயோக் பரிந்துரையின்பேரில், எம்.எஸ். சுவாமிநாதன் அறக்கட்டளை, இந்திய நூலக இயக்கம் மற்றும் பொதுநூலகத்துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன. தேசிய அளவில் 40 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளராக நூலகர்  மா. ஆசைத்தம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
      வாசிப்பு இயக்கம் 2022-இன் முதல் நிகழ்ச்சியை திருவாரூர் செய்தி மக்கள் தொடர்புத் துறை கண்காணிப்பாளர் செந்தில் ராஜன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், "இவர்கள் இல்லையென்றால்' என்ற தலைப்பில் காணொலி காட்சி மற்றும் புத்தக வாசிப்பின் மூலம் தேசிய தலைவர்களின் வரலாறு காட்டப்பட்டது. மேலும், அவர்களைப் பற்றி மாணவர்கள் கலந்துபேசினர். இதில், திருவாரூர் சாய்ராம் பள்ளி மாணவர்கள் 150 பேர் பங்கேற்றனர்.
    நிகழ்ச்சியில், நூலகக் கண்காணிப்பாளர் மு. தையல்நாயகி, வாசகர் வட்டப் பொறுப்பாளர்கள் சத்திரியன், ஆர்.ஜி.  மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர் மா. ஆசைத்தம்பி, மைய நூலகர்கள் வடிவேலு, அன்னப்பழம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai