சுடச்சுட

  

  முத்துப்பேட்டையில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரி அமமுகவினர் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 27th June 2018 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட 18-வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதைக் கண்டித்தும், தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக் கோரியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளர் லக்கி நாசர் தலைமை வகித்தார். நகர துணைச் செயலாளர் ஏ.டி.எஸ். ரமேஷ், நகரப் பொருளாளர் அயூப்கான், நகர இளைஞர் அணி செயலாளர் ஜெகபர் அலி, மாவட்டப் பிரதிநிதி அஜீஸ் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். முத்துப்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  பின்னர், பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai