Enable Javscript for better performance
ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச வசதிகளைத் திருத்தி அமைக்க வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன- Dinamani

சுடச்சுட

    

    ரயில் நிலையங்களில் குறைந்தபட்ச வசதிகளைத் திருத்தி அமைக்க வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்  வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th June 2018 08:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயணிகளின் போக்குவரத்து வர்த்தகம் மேம்பட ரயில் நிலையங்களின் குறைந்தபட்ச வசதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
    இதுதொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது :
    கிராமப்புறங்களில் 2,326 ரயில் நிலையங்கள், புறநகர் பகுதிகளில் 507 மின்சார ரயில் நிலையங்கள், பிற ஊர்களில் 905 என மொத்தம் 8,738 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் வருவாயின் தரத்துக்கு ஏற்ப பயணிகளுக்கு வசதிகள் செய்துத் தரப்படுன்றன. இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு அமைக்கப்பட்டு, தரம் பிரிக்கப்படுகிறது.
    அதன்படி, கடந்த 2013-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட குழு, ஆண்டு வருமானம் ரூ. 60 கோடிக்கு மேல் உள்ள ரயில் நிலையங்களை முதல் தர ரயில் நிலையம் எனவும், ரூ. 60 லட்சத்துக்கும் குறைவான ரயில் நிலையங்களைக் கடைசி தரம் எனவும் வரையறுத்து, ஏ 1- முதல் எப் வரை தரம்பிரித்தது. 
    நடப்பாண்டுக்கான குழு புறநகர் அல்லாத ரயில் நிலையங்களில் 6, புறநகர் மற்றும் கிராமப்புற நிலையங்களில் தலா மூன்று என 12 ஆக தரம் பிரித்தது. புறநகர் அல்லாத பிரிவில் ஆண்டு வருமானம் ரூ.500 கோடிக்கு மேல் உள்ள ரயில் நிலையங்கள் முதல் தரம், ரூ.1 கோடிக்குக் கீழ் உள்ள ரயில் நிலையங்கள் கடைசி தரம், புறநகர் பிரிவில் ரூ. 25 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் உள்ள ரயில் நிலையங்கள் முதல் தரம் மற்றும் ரூ. 10 கோடிக்குக் கீழ் உள்ள ரயில் நிலையம் கடைசி தரம் என நிர்ணயிக்கட்டது. இந்த புதிய வரையறைக்குப் பின் கடைசி தரத்தில், 6,364 ரயில் நிலையங்கள் உள்ளன. இது 73 சதவீதமாகும். கடைசி தர நிலையங்களுக்கு கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் இல்லை. அங்கு குறைந்தபட்சம் ஒரு கழிவறை, சிறுநீர் கழிப்பிடம், 2 குடிநீர்க் குழாய்கள், 10 பேர் அமரும் அளவுக்கு இருக்கைகள் போதுமானது. இதுவே புறநகர் நிலையமாக இருப்பின், கூடுதலாக ஓர் கழிவறை போதுமானது.
    மேலும், 2,266 ரயில் நிலையங்களில் பயணிகள் அமர மரத்தடி நிழலையும், கட்டணக் கழிவறையையும் குறைந்தபட்ச வசதியாக இக்குழு நிர்ணயித்திருக்கிறது. பயணிகள் போக்குவரத்து வர்த்தகம் மேம்பட ரயில் நிலையங்களின் குறைந்தபட்ச வசதிகள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்துகிறது என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai