Enable Javscript for better performance
இயற்கை உரம் தயாரிப்பு பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் வளம் குன்றா நிலைத்த வேளாண்மை மற்றும் இயற்கை உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன், பருவநிலை மாறுதலுக்கேற்ப காவிரி, வெண்ணாறு வடிநிலக் கோட்டப் பகுதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், திருத்துறைப்பூண்டி சுமங்கலி மகால் திருமண அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆர். ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்தும், பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும் நெல் ஜெயராமன் விளக்கிக் கூறினார். கதிராமங்கலம் ஸ்ரீராம் குறைந்த விதையில் அதிக மகசூல் பெறுவது குறித்து விளக்கமளித்தார்.மேலும், இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் வரவேற்றார். சிறப்பு உதவி கண்காணிப்பு பொறியாளர் ஞானாம்பாள், திருவாரூர் வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வம், பாலம் தொண்டு நிறுவன இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாரம்பரிய நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. உதவி பொறியாளர் அமுதா நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai