Enable Javscript for better performance
உரிமம் பெறாத திருமண மண்டபங்கள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி நகராட்சி மற்றும் வட்டப் பகுதிகளில், உணவுப் பாதுகாப்பு துறையிடமிருந்து உரிமம் பெறாமல் செயல்படும் திருமண மண்டபங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் கோ.செல்வராஜ் எச்சரித்துள்ளார்.
     இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006- இன் படி, திருமண மண்டபங்கள் மற்றும் சமையல் செய்யப்படும் அனைத்து இடங்களும், சமையல் செய்வதற்கான உள்கட்டமைப்பு, புகை வெளியேறும் வசதி, சமையல் அறையின் இட வசதி, தூய்மை, கட்டடத்துக்கு வர்ணம் பூசிய கால அளவு, கழிவுநீர் வெளியேறும் வசதி, சமையல் பாத்திரங்களின் தன்மை, குடிநீர் தொட்டி பராமரிப்பு, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படுகிறது.
     இந்த உரிமத்தை மண்டபத்தில் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். இதுவரை உரிமம் பெறாத திருமண மண்டபங்களின் மீது வழக்கு தொடரப்படும். உணவுப் பாதுகாப்பு ஆணையம் உரிமம் இல்லாத திருமண மண்டபங்களில் சமையல் செய்ய வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்த புகாரை 94440 42322 என்ற செல்லிடப் பேசி எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai