சுடச்சுட

  

  "குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க துரித நடவடிக்கை அவசியம்'

  By DIN  |   Published on : 28th June 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர். கலைமதி அறிவுறுத்தினார். 
  திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்டரங்கில் சமூகப் பாதுகாப்புத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சார்பில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, காவல் துறை   மற்றும்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை இணைந்து நடத்திய பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்று அவர் பேசியது: 
  பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்டவைகளில் போலீஸார் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் விரைவாக மருத்துவப் பரிசோதனை, குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். போக்சோ சட்டத்தின்படி, குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் மருத்துவப் பரிசோதனைக்காக மகிளா நீதிபதியின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை. எனவே, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
  என்றார். 
  இப்பயிற்சியில் மகிளா நீதிமன்ற கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ். பக்கிரிசாமி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் மற்றும் சார்பு நீதிபதி எஸ். கோவிந்தராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஜான்ஜோசப், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெ. செல்வராசு  உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
   இதில் 40-க்கும் மேற்பட்ட போலீஸார் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai