சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே சரஸ்வதி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கின.
  திருவாரூர் அருகே கூத்தனூரில் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு என தனிக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வழிபாடு செய்த பிறகு பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்தால் நன்றாக படிப்பார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறப்புகள் நிறைந்த இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
  இதையொட்டி, முதல்கால யாக சாலை பூஜை புதன்கிழமை தொடங்கியது. முன்னதாக, வாஸ்து சாந்தி திங்கள்கிழமையும், தனபூஜை, லட்சுமி ஹோமம் ஆகியவை செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. வியாழக்கிழமை (ஜூன் 28) இரண்டு மற்றும் 3 ஆம் கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 29-இல் 4 மற்றும் 5-ஆம் கால யாகசாலை பூஜைகளும், ஜூன் 30-இல் 6 மற்றும் 7-ஆம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகின்றன. பின்னர் ஜூலை 1-ஆம் தேதி காலை 8-ஆம் காலை யாகசாலை பூஜை நிறைவுக்குப் பின்னர் கோயில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai