போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
By DIN | Published on : 28th June 2018 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குடவாசலில் போதைப் பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோதப் போதைப் பொருள் கடத்தல் ஒழிப்பு நாளையொட்டி, குடவாசல் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குடவாசல் காவல் துறையினர் இணைந்து இப்பேரணியை நடத்தினர். இப்பேரணியை நன்னிலம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அருண் தொடங்கிவைத்தார். இதில், கல்லூரி முதல்வர் ஜெ. மலர்விழி, குடவாசல் காவல் துறை ஆய்வாளர் மணிமாறன், கல்லூரி பேராசிரியர்கள் அ. ஜான்பீட்டர், சா. சகாயராஜ், வே. ரமேஷ்குமார், அ. சுரேஷ், ஜோ. ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் பங்கேற்ற மாணவர்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தியும், கோஷங்கள் எழுப்பியும் வந்தனர். கல்லூரி வாயிலிலிருந்து தொடங்கியப் பேரணி முக்கிய வீதிகளின் வழியே குடவாசல் பேருந்து நிலையம் வரை நடைபெற்றது.