சுடச்சுட

  

  மக்கள் நேர்காணல் முகாமில் ரூ. 7.39 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியர் வழங்கினார்  

  By DIN  |   Published on : 28th June 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூத்தாநல்லூர் அருகே புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், ரூ.7 லட்சத்து 39ஆயிரத்து 686 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வழங்கினார்.
  கூத்தாநல்லூர் வட்டம், சாத்தனூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர்  செல்வி வரவேற்றார்.
  முகாமில், வருவாய்த் துறை சார்பில் 16 பேருக்கு ரூ. 2 லட்சத்து 46 ஆயிரத்து 650 மதிப்பில் விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 9 பேருக்கு பட்டா மாற்ற ஆணை, உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 13 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணை, 13 பேருக்கு கணினி சிட்டா நகல், 6 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத் நலத் துறை சார்பில் இருவருக்கு ரூ.10 ஆயிரத்து 36 மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டி, வேளாண்மைத் துறை சார்பில் 7 பேருக்கு ரூ. 7ஆயிரத்து 500 மதிப்பில் கைத்தெளிப்பான் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
  இதேபோல், தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.4 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வங்கி  நிதியுதவியுடன் கூடிய நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 67  பேருக்கு ரூ. 7  லட்சத்து 39 ஆயிரத்து 686 மதிப்பிலான நலத்திட்ட  உதவிகளை மாவட்ட  ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வழங்கினார். 
  பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர், "திருவாருர் மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும், வேளாண்மை பொறியியல் துறை  மூலம் ரூ. 22 கோடி மதிப்பில் 2,200 பண்ணைக் குட்டைகள் அமைக்க தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. இதை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார். 
  இம்முகாமில் சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ரெங்கநாதன், சுகாதாரத் துறை இணை  இயக்குநர் மருத்துவர் உமா, பொது மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர்  மருத்துவர் செந்தில்குமார், கோட்டாட்சியர் பத்மாவதி  உள்ளிட்ட  அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai