Enable Javscript for better performance
மன்னார்குடியில் சுவாமி உத்ஸவத்தின்போது பல்லக்கு வாரைக் கம்பு முறிவு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் சுவாமி உத்ஸவத்தின்போது பல்லக்கு வாரைக் கம்பு முறிவு

    By DIN  |   Published on : 28th June 2018 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற சுவாமி பல்லக்கு உத்ஸவத்தின்போது, பல்லக்கின் வாரைக் கம்பு முறிந்ததால் நிலை தடுமாறிய பல்லக்கை  கீழே விழாமல், சுமைத் தொழிலாளர்கள், பக்தர்கள் தாங்கி பிடித்தனர்.
    மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவத்தையொட்டி, பத்து நாள்கள் நடைபெறும் திரு விழாவின் ஒவ்வொரு நாளும் காலையில், ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, கோயிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு நான்கு வெளிப் பிராகாரங்களை சுற்றி வந்து, திருமஞ்சனவீதி வழியாக ஹரித்ராநதி தெப்பகுளம் தென்கரையில் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு வடக்குவீதி, கீழவீதி வழியாக கோயில் சென்றடைவார்.
    ஒன்பதாம் நாளான புதன்கிழமை கோயிலிருந்து பல்லக்கில் சுவாமி புறப்பட்டார். இந்த பல்லக்கு வாகை மரத்தில் தயாரிக்கப்பட்ட பழைமையான வாரைக் கம்புகள் 20 அடி நீளத்துக்கு இரண்டு கம்புகள் இணைக்கப்பட்டிருக்கும். பல்லக்கினை 15-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் பணியாளர்கள் நான்கு முனையிலும் நின்று தூக்கிச் சென்றுகொண்டிருந்தனர். பல்லக்கு தெற்குவீதியில் சென்றுகொண்டிருந்தபோது பல்லக்கின் முகப்பு பக்க வாரைக் கம்பு திடீரென முறிந்ததும், பல்லக்கு நிலை தடுமாறியதை உணர்ந்து சுதாகரித்துக் கொண்ட சுமைப் பணியாளர்கள் சுவாமி இருந்த பல்லக்கை அருகிலிருந்த பக்தர்களின் உதவியுடன் நடுவீதியில் கீழே இறக்கி வைத்தனர். பின்னர், கோயிலிருந்து மாற்று வாரைக் கம்பு எடுத்து வந்து  பொருத்தப்பட்டு, பல்லக்கில் சுவாமி உத்ஸவம் மீண்டும் தொடங்கியது. இதனால் சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் உத்ஸவம் தடைப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai