சுடச்சுட

    

    மன்னார்குடி ஹரித்ராநதி தெப்ப உத்ஸவம் இன்று நடைபெறுகிறது

    By DIN  |   Published on : 28th June 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் ஹரித்ராநதி தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை (ஜூன் 28) நடைபெறுகிறது.
    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில்ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், பெருமாளுக்கு பத்து நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஜூன் 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்வான, ஹரித்ராநதி தெப்ப உத்ஸவம் வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி, கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி தெப்பத்தில் ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai