சுடச்சுட

  

  திருவாரூரில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை சரிசெய்ய மாவட்ட குறைதீர் அலுவலராக, மாவட்ட வருவாய் அலுவலர் செயல்படுவார் என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பான புகாரை, 1967 மற்றும் 1800 425 5901 என்ற இலவச உதவி தொலைபேசி  அழைப்பு வாயிலாகவோ அல்லது w‌w‌w.‌t‌n‌p‌d‌s.‌g‌o‌v.‌i‌n என்ற மாநில அரசின் இணையதளம் மூலமாக பொதுமக்கள் தெரிவிக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் மாவட்ட குறை தீர் அலுவலராக மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai