சுடச்சுட

  

  கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர சட்டப் பேரவையில் எம்எல்ஏ கோரிக்கை

  By DIN  |   Published on : 29th June 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீடாமங்கலம் ஒன்றியம் நகர், கருவேலங்குளம் மற்றும் கற்கோவிலுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று சட்டப் பேரவையில் மன்னார்குடி தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கோரிக்கை விடுத்தார். 
  தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் புதன்கிழமை நடைபெற்ற பேரவை நிகழ்ச்சியில், மன்னார்குடி பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா பேசியது: மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நகர்,  ஊராட்சி போன்ற பல ஊராட்சிகளில் மக்கள் பேருந்து வசதிகளின்றி பெரிதும் பாதிப்படைந்துள்ளார்கள். குறிப்பாக நகர் பகுதியில் அதிகம் பேர் பாதிப்படைந்துள்ளனர். கோவில்வெண்ணி-அம்மாப்பேட்டையிலிருந்து செல்லும் பேருந்துகளை நகர்-வாசுதேவமங்கலம்- பண்ணிமங்கலம்- நரசிங்கமங்கலம்
  - சித்தமல்லிக்கும், இதேபோல், அங்கு அரசு தொழிற் பயிற்சி பள்ளியும் உள்ளது. ஏற்கெனவே, அந்த வழித்தடத்தில் பேருந்துகள் இயங்கிக்கொண்டிருந்தன. இடையில் அச்சாலைகள் சரியில்லாத காரணத்ததால் நிறுத்தி விட்டார்கள். இப்போது, சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால், தயவு செய்து அந்த பழைய வழித் தடத்தை மீண்டும் இயக்க வேண்டும்.  
  இதேபோல், ராயபுரம் வழியாக செட்டிச்சத்திரம் செல்லும் பேருந்து எண் 14 காளாஞ்சிமேடு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தது. அந்த வழித்தடத்தில் பாலப் பணிகள் நடைபெற்றதால், பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. தற்போது, அப்பாலம் பணிகள் நிறைவடைந்து விட்டது. ஆகவே, மீண்டும் காளஞ்சிமேடு - நாவல்பூண்டி-ராயபுரம் வழியாக செட்டிச்சத்திரத்திற்கு பேருந்து இயக்க வேண்டும். 
  இதேபோல், மன்னார்குடி-தேவங்குடி பேருந்தை கருவேலங்குளம்- வழியாக கற்கோவில் வரை பேருந்து சேவையை நீட்டிக்க வேண்டும். மன்னார்குடி கலைக் கல்லூரி மாணவர்களுக்கு, மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பும் மற்ற பகுதிகளுக்கு திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை போன்ற பகுதி மாணவர்களுக்கு இணைப்பும் செய்து தர வேண்டும். 
  அப்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியது: உறுப்பினர் 5,6 கேள்விகளை கேட்டிருக்கிறார். ஒரு வழித்தடத்திலே சாலை வேலை நடைபெறுவதாகவும், இன்னொரு வழித் தடங்களில் பாலம் வேலைகள் நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் கோரியிருக்கிற அந்த வழித்தடங்களை எல்லாம் ஆய்வு செய்து  நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்குவதற்கு இந்த அரசு ஆவண செய்யும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai