Enable Javscript for better performance
கூட்டுறவுத் துறை ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, மண்டல இணைப் பதிவாளர் கோ. காந்திநாதன் தலைமை வகித்தார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கு குறுவை பயிர்க்கடன் வழங்குதல் குறித்த அறிவுரைகள், இடுபொருள்கள் தடையின்றி கிடைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 
    கூட்டத்தில், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் எஸ். மனோகரன், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் தி. ஜெயராமன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் எம். செளந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai