Enable Javscript for better performance
தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இடஒதுக்கீடு போராட்டம் குறித்து தரக்குறைவாக பேசியதாக கூறி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து திருவாரூரில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
    திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பாலு தலைமை வகித்தார். இதில், வடக்கு மாவட்டச் செயலர் அய்யப்பன், தெற்கு மாவட்டச் செயலர் ஜேசி. பாலு, மாநில துணைத் தலைவர் காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai