Enable Javscript for better performance
தமிழ்நாடு பொன் விழா கலைப் போட்டி: நாளை நடைபெறுகிறது- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பொன்விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் கலைப் போட்டிகள் சனிக்கிழமை (ஜூன் 30) நடைபெற உள்ளன என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரலாற்றுச் சிறப்பு மிக்க நமது மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரோடு இணைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, தமிழ்நாடு பொன்விழா ஆண்டாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு பொன் விழாவையொட்டி, திருவாரூர் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு நிறைவாக மாநில அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்படும் கலைப் போட்டிகளில் நாட்டுப்புற நடனம், தமிழிசை வாய்ப்பாட்டு, பரத நாட்டியம் (பாரதியார், பாரதிதாசன் பாடல்கள்) ஆகிய கலைப் போட்டிகள் நடைபெற உள்ளன.
    போட்டிகளில் 15 முதல் 30 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் மற்றும் தொழில்முறைக் கலைஞர்கள் பங்கேற்கலாம். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ. 5,000, 2-ஆம் பரிசு ரூ.3,000, 3-ஆம் பரிசு ரூ. 2,000  வழங்கப்படும். மாவட்ட அளவில் முதல் மூன்று பரிசுகள் பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் மாநிலக் கலைப் போட்டிகளில் பங்கேற்கலாம். மாநில போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000 மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம், 2-ஆம் பரிசு ரூ. 25,000 மற்றும் 4 தங்கப் பதக்கம், 3-ஆம் பரிசு ரூ. 10,000 மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம் வழங்கப்படும். திருவாரூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் திருவாரூர் வாசன் நகரில் (ஸ்ரீசாய்பாபா கோவில் அருகில்) உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் ஜூன் 30-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. தகுதியானவர்கள் பங்கேற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. 
    இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜூன் 30 ஆம் தேதி காலை 9 மணிக்கு போட்டிகள் நடைபெறும் இடத்தில் தங்களது பெயர்களை பதிவுசெய்து கொண்டு போட்டிகளில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai