சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் நிவாரண உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
  கட்டிமேடு எல்லை நாகலடிதெருவைச் சேர்ந்தவர் ஜெயபால். கூலித் தொழிலாளியான இவரது கூரை வீடு கடந்த சனிக்கிழமை தீக்கிரையானது.
  இதையறிந்த திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்கத் தலைவர் பொறியாளர் கே. சுப்பிரமணியன், செயலாளர் எஸ். பிரகாஷ், பொருளாளர் ஆர். சின்னதுரை, துணைத் தலைவர் ஏ. முத்துக்குமரன், முன்னாள் செயலாளர் எம். வேதமணி ஆகியோர் ஜெயபால் குடும்பத்துக்கு ரூ. 5,000 மதிப்பிலான மளிகைப் பொருள்கள், துணிமணிகள் மற்றும் பாத்திரங்களை வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai