சுடச்சுட

  

  புனித பயணம் செல்வோர் ஜூலை 6-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

  By DIN  |   Published on : 29th June 2018 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜூலை 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசு நபர் ஒருவருக்கு ரூ. 20,000 நிதியுதவி வழங்குகிறது. இத்திட்டத்தின்கீழ் பயணம் மேற்கொள்ள  விரும்பும் கிறிஸ்தவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயாசமுத்திரம் மற்றும் கிறித்தவமத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம் 2018 ஜூலை முதல் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.  பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.
  இதற்கான விண்ணப்பங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து கட்டணமின்றி பெறலாம். இதற்கான,  நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பபடிவம் ஆகியன w‌w‌w.​b​c‌m​b​c‌m‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்ப படிவங்களை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். 
  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேவையான அனைத்து இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம், 807 (5-ஆவது தளம்), அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு ஜூலை 6-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 
  விண்ணப்பதாரர் நேரில்வர தேவையில்லை. எனவே,  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் இத்திட்டத்தின்கீழ் உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai