Enable Javscript for better performance
மன்னார்குடியில் மருத்துவ பரிசோதனை அரங்கம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடி ரோட்டரி சங்க சமூக கல்வி அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவப் பரிசோதனையகம், ஆதரவற்ற மகளிர் மற்றும் படித்த இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அரங்கம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
     இதற்காக, அறக்கட்டளைத் தலைவர் வி. ராஜகோபாலுக்குச் சொந்தமான, வடசேரி சாலையில் உள்ள இடத்தில், மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில்  ரூ. 60 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் தரை தளத்தில் மருத்துவப் பரிசோதனையகமும், மேல் தளத்தில் ஆதரவற்ற பெண்கள்,விதவைகள், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு தையல் உள்ளிட்ட சுயதொழில் பயிற்சியும், வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள  ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சியும் இலவசமாக அளிக்கப்பட்டவுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.கே. ரெத்தினசபாபதி தலைமை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பி.எஸ். ரமேஷ்பாபு  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, புதிய கட்டடமான ஆண்டாள் வெங்கடேசன் அரங்கத்தை திறந்து வைத்தார்.
     மாவட்ட துணை ஆளுநர் பி. சூரியபிரகாஷ், முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் ஏ. மணி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். சங்கச் செயலர் ஜி. கார்த்திகேயன், பொருளாளர் டி. கார்த்திகேயன், அறக்கட்டளைத் தலைவர் வி. ராஜகோபால், கௌரவத் தலைவர் டி. மனோகரன், செயலர் எஸ். துரைராஜ், பொருளாளர் டி. ராஜேந்திரன், செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி முதல்வர் சீ. அமுதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai