Enable Javscript for better performance
ரஜினி மக்கள் மன்ற மகளிரணி, இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ரஜினி மக்கள் மன்ற மகளிரணி, இளைஞரணிக்கு நிர்வாகிகள் நியமனம்

    By DIN  |   Published on : 29th June 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டையில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, ரஜினி மக்கள் மன்ற ஒன்றியச் செயலாளர் ஞானவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜரிஷி தேவன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். இக்கூட்டத்தில் மன்றத்தின்  ஒன்றிய மகளிர் அணி செயலாளராக மணிமேகலை, துணைச் செயலாளர்களாக நாகவள்ளி, ரேவதி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினராக மைனாவதி ஆகியோரும், ஒன்றிய இளைஞர் அணி செயலாளராக அசோக் மற்றும் துணை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் லெனின், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கோபிநாத், மகேந்திரன், கோபு உளிட்டோர் கலந்துகொண்டனர். நிர்வாகி கோபிநாத் நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai