சுடச்சுட

    

    வயலில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி வெடித்து பெண் காயம்

    By DIN  |   Published on : 29th June 2018 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே புதன்கிழமை மாலை வயலில் புல் அறுக்கும்போது, நரி பிடிக்க வைத்திருந்த நாட்டு வெடி (வெங்காய வெடி) வெடித்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
    உக்காடுதென்பரை காமண்டி தெருவைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மனைவி புஷ்பவள்ளி (60). இவர், புதன்கிழமை மாலை கால்நடைகளுக்கு புல் அறுப்பதற்காக வயல் பகுதிக்குச் சென்றுள்ளார். அதே பகுதியில் பாமணியாற்றம் கரையோரம் உள்ள அ. ரெத்தினம் என்பவரது வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு நரி பிடிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியின் மீது புஷ்பவள்ளியின் கை பட்டதாம். உடனே அந்த வெடி வெடித்ததில் அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் புஷ்பவள்ளியை மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தகவலறிந்து அங்கு சென்ற மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், பரவாக்கோட்டை காவல் ஆய்வாளர் உஷாநந்தினி ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai