சுடச்சுட

  

  விடுதிகளில் பகுதிநேர துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 29th June 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளில் பகுதி நேர துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் காலியாக உள்ள 8 ஆண் மற்றும் 6 பெண் பகுதி நேர துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் (தொகுப்பு ஊதியம் மாதம் ரூ. 4,700) நேர்காணல் மூலம் இனச் சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.  1.7.2018 தேதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள்ளும், இதரப் பிரிவினருக்கு 18 முதல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  இத்தகுதிகளுடன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்ற விரும்புவோர் தங்களது பெயர், தகப்பனார் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்), கல்வித் தகுதி, சாதி, முன்னுரிமை விவரம் (ஏதேனும் இருப்பின் குறிப்பிடவும் (விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள், கலப்பு திருமணம்), வேலை வாய்ப்பு பதிவு விவரம் (இருப்பின்), குடும்ப அட்டை எண், மார்பளவு புகைப்படம் ஒன்று ஆகிய விவரங்களுடனும், தேவையானவைகளுக்கு சான்று, நகல்களுடன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 
  குறித்த காலக்கெடுவுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் நேர்காணல் நடைபெறும். அதன், விவரம் தனியே தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai