Enable Javscript for better performance
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 5 பவுன் நகை, ரூ. 4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது.
    மன்னார்குடி கீழராஜவீதியைச் சேர்ந்தவர் திருச்செல்வம். இவரது மனைவி அபிராமசுந்தரி. இவர்களது 2 மகன்களும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
    திருச்செல்வம் அடிக்கடி வெளிநாடு சென்று வருவாராம். புதன்கிழமை திருச்செல்வம் சென்னை சென்றதால், அபிராமசுந்தரி, அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கிவிட்டு, வியாழக்கிழமை காலையில் வந்து பார்த்தபோது, வீட்டின் முக்கபக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மன்னார்குடி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai