சுடச்சுட

  

  "உடல் மாதிரிகள் மூலம் மருத்துவ முறையை அறிந்து கொள்வது அவசியம்'

  By DIN  |   Published on : 30th June 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் உடல் மாதிரிகள் மூலம் மருத்துவ முறையை அறிந்து கொள்வது அவசியம் என்றார் திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம். 
  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில், உடல் மாதிரிகளை வைத்து மருத்துவம் கற்பிக்கும் முறை குறித்து இருநாள் நடைபெறும் பயிலரங்கின் முதல் நாளான வெள்ளிக்கிழமை தொடங்கிய பயிலரங்கில் அவர் மேலும் பேசியது: 
  நோய்களை நேரடியாக பரிசோதிக்கும் முன்னர் உடல் மாதிரிகளின் மூலம் மருத்துவ முறைகளையும், அறுவைச் சிகிச்சை முறைகளை, மருத்துவ மாணவர்கள், மருத்துவம் சார்ந்த துறைகளில் படிக்கும் மாணவர்கள், செவிலியர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.இதன்மூலம், நோயுற்றவர்களை பார்க்கும்போது அவர்களுடைய உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிய இயலும். தமிழகத்தில் முதன்முறையாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மயக்க மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவத் துறை சார்ந்த உடல் மாதிரிகளை வைத்து இரண்டு நாள்கள் இப்பயிலரங்கம் நடைபெறுகிறது.
  பயிலரங்கில், உடல் மாதிரிகளின் மூலம் உயிர் மீட்பு சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை, இருதயத்துக்கு அருகில் உள்ள ரத்தக் குழாய்களில் செயற்கை குழாய் பொருத்தும் முறை, சிக்கலான பிரசவங்களை கையாளும் முறை, கருத்தடை சாதனம் பொருத்துதல், குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் அளித்தல், எலும்பு மஜ்ஜையில் மருந்து செலுத்தும் முறை, மூச்சுக் குழாயில் சிக்கிய பொருள்களை அகற்றும் முறை, கண் மற்றும் காது நோய்களை கண்டறியும் முறை ஆகியவைகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. பங்கேற்பவர்களின் விருப்பத்தை பொருத்து இந்த பயிலரங்கம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும் என்றார் மீனாட்சிசுந்தரம்.
  பயிலரங்கில் அகமதாபாத் பி.ஜே. மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டர்லிகா, சென்னை குழந்தைகள் ஆராய்ச்சி மைய இயக்குநர் அரசர் சீராளர், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மயக்க மருத்துவத் துறை தலைவர் குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு துறைத் தலைவர்கள் பிரதீபா, பூவதி, திருச்சி மயக்க மருத்துவத்துறை பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர். பயிலரங்கம் இன்று நிறைவடைகிறது.பயிலரங்குக்கான ஏற்பாடுகளை, மயக்க மருத்துவ பேராசிரியர்கள் சத்யன், ஸ்ரீதர், குழந்தைகள் நலத்துறை பேராசிரியர்கள் கண்ணன், ராஜா, மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியர்கள் பாக்கியவதி, பிரபா ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai