சுடச்சுட

    

    திருவாரூரில் எலக்ட்ரிக்கல் கடையிலிருந்து பணம் திருடியவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    திருவாரூர் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் குமரேசன் (38). வர்த்தகர் சங்க நிர்வாகி. இவரது எலக்ட்ரிக்கல் கடையில் நன்னிலம் மாப்பிள்ளைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் கிரிதரன் (22) பணிபுரிந்து வந்தார்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை கடையில் உள்ள கல்லா பெட்டியிலிருந்து ரூ. 1,600 ரொக்கத்தை விஜய் கிரிதரன் திருடியபோது, குமரேசனிடம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டாராம். இதையடுத்து, அவரை திருவாரூர் நகர போலீஸாரிடம் குமரேசன் ஒப்படைத்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விஜய் கிரிதரனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai