சுடச்சுட

    

    திருவாரூர் நகராட்சியில் குப்பைகள் கொட்டும் இடங்களில் மீண்டும் கோலம் போடும் பணி

    By DIN  |   Published on : 30th June 2018 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குப்பைகள் கொட்டும் இடங்களில், திருவாரூர் நகராட்சி சார்பில் கோலம் போடும் பணி வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கியது.
    சில மாதங்களுக்கு முன்னர் திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் இல்லாத இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி சார்பில் கோலங்கள் போடப்பட்டன. இதையடுத்து அந்த இடத்தில் அழகு மேம்பட்டதுடன், குப்பைகள் கொட்டுவதும் தடுக்கப்பட்டன.
    சில நாள்களுக்கு தொடர்ந்து கோலம் போடப்பட்டதால், யாரும் அந்த இடங்களில் குப்பைகளை கொட்டவில்லை. இதையடுத்து, கோலம் போடும் பணி படிப்படியாக குறைக்கப்பட்டது. கோலம் போடுதல் நிறுத்தப்பட்டாலும், அந்த இடத்தில் குப்பைகளை யாரும் கொட்டவில்லை. பின்னர், நகராட்சி சார்பில் ஓஎன்ஜிசி உதவியுடன் ரூ. 15 லட்சம்  மதிப்பில் 36 இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
    இந்நிலையில், சில இடங்களில் மீண்டும் சிலர் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். இதைக் கட்டுப்படுத்தும் வகையில் நகராட்சி சார்பில் 15 இடங்களில் கோலம் போடும் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. இந்த பணிகளை நகராட்சி பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட ஊழியர்கள் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai