சுடச்சுட

  

  நாளை இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா  ஆலோசனைக் கூட்டம்

  By DIN  |   Published on : 30th June 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீடாமங்கலத்தில் பாம்பலம்மன் கோயில் தெருவில் இயங்கி வரும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) நடைபெறுகிறது.
  மிகவும் பழைமையும், பெருமையும் வாய்ந்த இப்பள்ளியின் நூற்றாண்டு விழா 2019 -இல் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் பள்ளியில் நடைபெறவுள்ளது.
  இந்த கூட்டத்தில் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், முன்னாள் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
  இதற்கான ஏற்பாடுகளை இலக்குமி விலாச நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai